Kovai 26 ஆண்டுகளாக பட்டாசே வெடிக்காத கோவை கிராமம் - வவ்வால்களுக்காக ஒரு காட்டையே உருவாக்கி சாதனை
Kovai 26 ஆண்டுகளாக பட்டாசே வெடிக்காத கோவை கிராமம் - வவ்வால்களுக்காக ஒரு காட்டையே உருவாக்கி சாதனை கோவை மாவட்டம் சூலூர் அருகே, அரிய வகை வவ்வால்களை பாதுகாப்பதற்காக, கடந்த 26 ஆண்டுகளாக கிராம மக்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காமல் இருந்து வருகின்றனர்.கிட்டாம்பாளையம் கிராமத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை வவ்வால் இனங்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்க அங்குள்ள மக்கள், பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இங்குள்ள ஆலமரம் மற்றும் புளிய மரங்களில் வசித்து வரும் வவ்வால்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.