நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

Update: 2025-04-20 04:53 GMT

விசைத்தறி நெசவாளர்கள் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு

கோவை சூலூரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறியாளர்களுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 30 நாட்களுக்கு மேலாக நெசவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெசவாளர்களை சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், விசைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்