Kovai Love Marriage | துணிச்சலாக முடிவெடுத்த பெண் - கோவையில் தடுக்கப்பட்ட ஆணவப் படுகொ*ல?
காதல் தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் வீட்டார் கைது
கோவையில் வேற்று சமூக இளைஞரை கரம்பிடித்த பெற்ற மகளையே ஆணவ கொலை செய்துவிடுவோம் என மிரட்டிய குடும்பத்தினரை போலீசார் கைது செய்தான்ர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பழனியாண்டிபுதூரை சேர்ந்த பவிப்பிரியா, சேதுபதி ஆகிய இருவரும் பெண் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், வேற்று சமூக இளைஞரை திருமணம் செய்துகொண்டதால், குடும்பத்தினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கோவை மாவட்ட எஸ் பி ஆபீஸில் பவிப்பிரியா புகாரளித்துள்ளார். புகாரையடுத்து, பவிப்பிரியாவின் தந்தை, தாய், சகோதரர், உறவினர் ஆகிய நான்கு பேரை கைது செய்து, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.