கோவையில் திடீர் பரபரப்பு - ஒன்றுகூடி அலறவிட்ட மக்கள்

Update: 2025-03-04 08:03 GMT

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், சுற்றுச்சுழலை மாசுபடுத்தும் சாயத் தொழிற்சாலையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். ஆலையில் இருந்து புகை வெளியேறி காற்றில் துர்நாற்றம் பரவியதை அடுத்து ஆலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சு நடத்தி, பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்த பின்னர், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்