Pmmoditnvisit | Congress | பிரதமர் வருகை.. வீட்டுக்காவலில் தமிழக காங். முக்கிய தலைவர்

Update: 2026-01-23 03:02 GMT

தமிழகம் வரும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட திட்டமிட்டதாக தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் வீட்டு காவலில் கைது செய்யப்பட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தருகிறார்.

ரஞ்சன் குமார், பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டி, கருப்பு பலூன் பறக்கவிட திட்டமிட்டதாக கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவல் துறையினர் ரஞ்சன் குமாரை கைது செய்து வீட்டு சிறையில் வைத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்