Velmurugan பேரவையில் வேல்முருகன் எழுப்பிய கேள்வி.. ``தமிழ்நாட்டுல தான் இருக்கோம்’’.. அமைச்சர் பதில்
பேருந்துகளில் தமிழ்நாடு அரசு என ஏன் எழுதவில்லை?- அமைச்சர் பதில்
அரசு பேருந்துகளில், தமிழ்நாடு அரசு என ஏன் எழுதுவதில்லை? என சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்தார். நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோம், இங்குள்ள பேருந்துகள் அரசு பேருந்துகள்தான் என்று அவர் தெரிவித்தார்.
பேருந்து சேவை சரியாக வழங்கப்படுகிறதா என்றுதான் பார்க்க வேண்டும், அதில் ஏதாவது குறை இருந்தால் சுட்டிக் காட்டலாம் என்றும் அவர் தெரிவித்தார்.