Thiruparankundram``தி.குன்றம் மலை மீதுள்ள தூணில் நிரந்தர தீபம்?’’ - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Update: 2026-01-23 04:49 GMT

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் அணையா விளக்கு : இன்று விசாரணை

திருப்பரங்குன்றம் மலையில் தீபத் தூணில் ஆண்டு முழுவதும் அணையா விளக்கு ஏற்றக் கோரிய மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜன 23) விசாரணைக்கு வருகிறது.

மதுரையை சேர்ந்த ஹிந்து தர்ம பரிஷத் அமைப்பு சார்பில், திருப்பரங்குன்றம் மலையை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிரந்தர தீபம் ஏற்ற வேண்டும் என ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் அர்விந்த் குமார், என்.கோட்டீஸ்வர் சிங் அமர்வு விசாரிக்க உள்ளது. கார்த்திகை தீபம் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ள சூழலில், இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்