Rahul Gandhi | Congress | `கைக்கே வந்த பொக்கிஷம்..' - ராகுலுக்கு எதிர்பாரா மகிழ்ச்சி
`கைக்கே வந்த பொக்கிஷம்..' - ராகுலுக்கு எதிர்பாரா மகிழ்ச்சி
தொலைந்து போன தனது தாத்தாவின் ஓட்டுநர் உரிமம் கிடைத்ததால் ராகுல் மகிழ்ச்சி
பல ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போயிருந்த தனது தாத்தா ஃபெரோஸ் காந்தி பயன்படுத்திய ஓட்டுநர் உரிமம் மீண்டும் கிடைத்ததால் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மகிழ்ச்சி அடைந்துள்ளார்...
தனது தொகுதியான ரேபரேலிக்கு சென்ற ராகுல் காந்தி, ‘இளையோர் அடாகமி நடத்திய டி20 கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்தபோது, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் விகாஸ் சிங் அந்த உரிமத்தை ராகுலிடம் வழங்கினார்.
1938ஆம் ஆண்டு லண்டனில் வழங்கப்பட்ட இந்த உரிமம், ராய்பரேலியில் உள்ள பெரோஸ் காந்தி கல்லூரியில் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இதை சுமார் 65 ஆண்டுகளாக பாதுகாத்து வந்துள்ளனர். அது தற்போது ராகுலிடம் வழங்கப்பட்ட நிலையில், இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை உடனடியாக தனது தாய் சோனியா காந்தியிடம் ராகுல் தெரிவித்தார்.