Puducherry | JCM | அனைவருக்கும் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு - ஜோஸ் சார்லஸ் மார்டின்
அனைவருக்கும் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு - ஜோஸ் சார்லஸ் மார்டின்
புதுச்சேரியில் அனைவருக்கும் நல்ல கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார்.
புதுச்சேரி உருளையான்பேட்டை தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சியின் அலுவலகத்தை கட்சியின் நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
உருளையான்பேட்டை தொகுதி லட்சிய ஜனநாயக கட்சி நிர்வாகி கௌதம் குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், பொதுச்செயலாளர்கள் துரைசாமி, பிரபாகரன், மண்டல பொதுச்செயலாளர்கள் சுரேஷ், JCM மக்கள் மன்ற பொருளாளர் அயூப் கான், அரியாங்குப்பம் தொகுதி நிர்வாகி N.R.வாழுமுனி, நடிகர் தாடி பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஜோஸ் சார்லஸ் மார்டின், கழிவுநீர் கலந்த குடிநீரால் பாதிக்கப்பட்ட பகுதி உருளையான்பேட்டை என்றும், ஆட்சியாளர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார். முன்னதாக, ஸ்ரீ புற்று மாரியம்மன் கோவிலில் ஜோஸ் சார்லஸ் மார்டின் சாமி தரிசனம் செய்தார்.