PM Modi | tnvisit | தமிழகம் வரும் பிரதமர் - கூட்டத்திற்கு வரும் கூட்டணி கட்சிகள்
என்டிஏ கூட்டம்- பாதுகாப்பு பணியில் 4,000க்கும் மேற்பட்ட போலீசார்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதை ஒட்டி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கூட்டத்தில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்திற்கு வரும் கட்சியினரின் வாகனங்களை நிறுத்துவதற்கு 14 இடங்களில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.