Katpadi | ஊருக்குள் புகுந்த கருப்பு கூட்டம் - கால் தடத்துடன் CCTV-யில் சிக்கிய அதிர்ச்சி காட்சி
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே குடியிருப்பு பகுதியில் யானைகள் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
தமிழக, ஆந்திர எல்லைக்கு அருகே உள்ள இந்திரா நகர் மற்றும் ராஜீவ் காந்தி நகரை ஒட்டிய வனப்பகுதிகளில் யானைகளின் கால் தடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்குள்ள சிசிடிவி கேமராவில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருப்பதால், யானைகளின் நடமாட்டம் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.