கரூரில் கள்ள நோட்டு தயாரித்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,அவர்களிடம் இருந்து கள்ள நோட்டு தயாரிப்பதற்கான இயந்திரங்கள், 6 லட்சம் கள்ள நோட்டுக்களையும் போலீசார் கைப்பற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர். தாந்தோணிமலையை சேர்ந்தவர் காண்டீபன். இவர் டாஸ்மாக்கில் 500 ரூபாய் கள்ளநோட்டை மாற்றிய நிலையில், போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், சேலத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரையும்,ஆந்திர மாநிலத்தில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளிகளான,சானு, அர்ஜூன், ராஜேந்திரன் உள்ளிட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர்.