தேவாலயத்தில் மாறி மாறி தாக்கி கொண்ட இரு தரப்பினர் - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2025-02-11 10:41 GMT

கன்னியாகுமரி மாவட்டம், மேல ஆசாரிப்பள்ளத்தில் உள்ள தேவாலயத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு சென்றவர்களை மற்றொரு தரப்பினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்குள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் பங்குத்தந்தை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில், அவர் தலைமையிலான நிர்வாகிகள், ஆலய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்றொரு தரப்பினர் வாக்குவாதம் செய்தபோது, இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பதற்றம் நிலவியதால் போலீஸ் குவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்