Kanchipuram | சாலையோர தடுப்பில் நேருக்கு நேர் மோதிய கார் - டிரைவருக்கு நேர்ந்த கதி..
Kanchipuram | சாலையோர தடுப்பில் நேருக்கு நேர் மோதிய கார் - டிரைவருக்கு நேர்ந்த கதி.. காஞ்சியில் அதிர்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையோர தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் கார் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். சென்னையைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநரான தினேஷ், சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் கோயிலுக்கு பயணிகள் இருவருடன் சென்றுள்ளார். தண்டலம் அருகே கார் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் இருவரும் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், கார் ஓட்டுநருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.