தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல் தெரிவித்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழர் பண்பாட்டுக் கழக தலைவர் மதிவாணன் கருத்து தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பூர்வீகம் கன்னடம் என்றபோதும், தமிழகத்திற்கு வந்த பிறகு தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தமிழ் மொழியில் தான் பெயர் சூட்டியதாக தெரிவித்துள்ளார். அத்துடன் கமல் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த மதிவாணன், நீதிமன்றத்தில் கட்டாயப்படுத்தி அவரை மன்னிப்பு கேட்க வைக்கக்கூடாது என வலியுறுத்தினார்.