திருவேற்காட்டில் கே.ஏ.ஜி. டைல்ஸ் 6.0 பிரம்மாண்ட கண்காட்சி
திருவேற்காட்டில் கே.ஏ.ஜி. டைல்ஸ் 6.0 பிரம்மாண்ட கண்காட்சி தொடங்கியுள்ளது.
திருவேற்காடு அடுத்த நூம்பல் பகுதியில், கே.ஏ.ஜி. டைல்ஸ் 6.0 மாபெரும் கண்காட்சி தொடங்கியது. வெள்ளி, சனி, ஞாயிறு என, வரும் மூன்றாம் தேதி வரை மூன்று நாட்கள் இக்கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமான டைல்ஸ் ரகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், டைல்ஸ் டீலர்கள் என ஏராளமானோர் பார்வையிட்டு வாங்கிச் செல்கின்றனர். கண்காட்சியில் 30 சதவீத சலுகையுடன் டைல்ஸ் வழங்கப்பட்டு வருவதுடன், புதிய அதிநவீன டிசைன்களுடன் டைல்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. சுலப தவணை திட்டத்திற்கு பூஜ்யம் சதவீத வட்டி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலே, டீலர்கள் நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று டைல்ஸ் ரகங்களை செய்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக, அதன் நிர்வாக இயக்குனர் முரளிதரன் தெரிவித்தார்.