மதுரையில் நடைபெற்று வரும் KAG டைல்ஸ் கண்காட்சியில், பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பைபாஸ் சாலையில், KAG டைல்ஸ் ஷோரும் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், இரண்டு முறை டைல்ஸ் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான கண்காட்சி இன்று தொடங்கி, வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இக் கண்காட்சியில் 2500க்கும் மேற்பட்ட டைல்ஸ் வகைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், டைல்ஸ் வாங்கும் அனைவருக்கும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி, ஜீரோ சதவீதம் சுலப தவணை, 50 ஆயிரத்திற்கும் மேல் டைல்ஸ் வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் மதிப்புள்ள பாத் பிட்டிங் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 100 க்கும் மேற்பட்ட KAG டைல்ஸ் கிளைகளில் தற்போது கண்காட்சி நடைபெற்று வருவது குறிப்பிட தக்கது