புறப்பட்ட சில விநாடிகளில் தரையில் விழுந்து வெடித்து சிதறிய சிறிய ரக விமானம் - உள்ளே இருந்தவர்கள் நிலை?
இங்கிலாந்தின் லண்டனில் உள்ள சவுத் என்ட் விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. சவுத் என்ட் விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்துக்கு புறப்பட்ட அந்த விமானம், சில விநாடிகளில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து விமானம் தீப்பிடித்து எரிந்து வெடித்துச் சிதறியது. விபத்து நிகழ்ந்த இடமே புகை மூட்டமாக காணப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதா? அந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.