என்னBigg Boss Host இவரா..? இம்முறை என்ன ஸ்பெஷல் தெரியுமா? Exclusive அப்டேட்
Jio Star-ன் தென்னிந்திய தலைமை அதிகாரி கிருஷ்ணன் குட்டி அக்டோபர் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்க இருப்பதாகவும் இதை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். Jio Star-ன் தென்னிந்திய தலைமை அதிகாரி கிருஷ்ணன் குட்டி தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 1-ல் தங்களுடன் இணைந்ததால், இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களிடம் அதிக ஆர்வமாக பார்க்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியில் இணைந்தவுடன் , ஒரு வித்தியாசமான எனர்ஜியை கொண்டு வந்ததாகவும், அவர் மக்களிடம் பேசிய விதம் அனைவரையும் கவர்ந்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் இந்த இரண்டு நடிகர்களும் தங்களுடன் இணைந்தது தங்களின் அதிஷ்டம் எனவும் கூறினார்.