ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பிரபல வீரரை Ban செய்தது BCCI

Update: 2025-03-14 04:41 GMT

எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கிற்கு Harry Brook 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் Delhi Capitals அணியால் ஆறே கால் கோடி ரூபாய்க்கு ஹாரி ப்ரூக் ஏலம் எடுக்கப்பட்டார். சமீபத்தில் ஐபிஎல் தொடரில் தன்னால் விளையாட முடியாது என ஹாரி ப்ரூக் அறிவித்து விலகினார். இந்நிலையில், விதிகளின்படி ஐபிஎல் தொடரில் விளையாடவும் ஏலத்தில் பங்கேற்கவும் ஹாரி ப்ரூக்கிற்கு 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக பிசிசிஐ மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்