விரல்களை இழந்த சிசு..ரூ.33லட்சம் வழங்க பிரபல பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு உத்தரவு

Update: 2025-07-29 09:33 GMT

மருத்துவமனையின் தவறால் விரல்களை இழந்த குழந்தை - இழப்பீடு

சென்னை பெரம்பூரிலுள்ள தனியார் மருத்துவமனையின் கவனக்குறைவால், விரல்களை இழந்த சிசுவின் பெற்றோருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், சிகிச்சை செலவாக 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயையும் வழங்கும்படி, தனியார் மருத்துவமனைக்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொளத்தூரைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணுக்கு குறை பிரசவத்தை தடுக்க சிலிகான் வளையம் பொருத்தப்பட்டுள்ளது.வலி அதிகமானதால், அந்த கருவி அகற்றப்பட்ட நிலையில், 24 வாரங்களில் பவித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எடை குறைவு, இதய துடிப்பு பிரச்னைகள் காரணமாக குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. தொற்று, தாமதமான சிகிச்சை காரணமாக குழந்தையின் வலது கையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, விரல்களை இழக்க நேரிட்டது. மருத்துவர்களின் கவனக்குறைவால் தான் குழந்தை விரல்களை இழக்க நேரிட்டுள்ளது எனக் கூறி, பவித்ரா, சென்னை வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்