ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கொப்பரை நிறுவனத்தில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். எழுமாத்தூர் சாலையில் அமைந்துள்ள காந்தி வீதியில் மெய்யழகன் என்பவருக்கு சொந்தமான கொப்பரை கொள்முதல் நிறுவனத்தில், 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்தியா முழுவதும் செயல்படும் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மும்பையில் அமைந்துள்ளது.