ரிப்பேர் ஆன டிவி.. கைவிரித்த நிறுவனம் - பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.5 லட்சம் கொடுக்க அதிரடி உத்தரவு
திருவாரூரில், பழுதடைந்த LED டிவியை மாற்றித் தராத சாம்சங் நிறுவனம் 45 நாட்களுக்குள் பழுதடைந்த டிவிக்கு பதிலாக, அதே மாடலில் புது டிவியை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் டிவியின் விலையான ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 99 ரூபாயை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என மாவட்ட நூகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. புலிவலம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் அளித்த புகார் தொடர்பான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், கூடுதலாக நுகர்வோரான கார்த்திக்கிற்கு மன உளைச்சல், பொருளாதார இழப்பு ஏற்படுத்தியதற்கு சாம்சங் டிவி நிறுவனம் நஷ்ட ஈடாக ஒரு லட்சம் ரூபாய் மற்றும் வழக்குத் செலவு தொகையாக 10,000 ரூபாயையும் 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.