நடுரோட்டில் அழுதுகொண்டே 3 வயது குழந்தை செய்த செயல் -ஆச்சரியத்தில் வாயடைத்து போன மக்கள்
ஓசூர் அருகே சூளகிரியில் தனியாக அழுது கொண்டிருந்த மூன்று வயது பெண் குழந்தை , போலீசாரிடம் தனது வீட்டை சரியாக அடையாளம் காட்டிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரவுண்டா என்ற இடத்தில் அழுது கொண்டிருந்த பெண் குழந்தையை மீட்டு, பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலிசார் வீட்டின் விலாசத்தை கேட்ட நிலையில், குழந்தை அழுதவாறு தனது இல்லத்தை தானே காண்பிப்பதாக கூறியுள்ளது. மேலும் இருசக்கர வாகனத்தில் ஏற மறுத்த குழந்தை, நடந்தே சென்று தனது வீட்டை அடையாளம் காட்டியுள்ளது. குழந்தையின் செயலைக் கண்டு ஆச்சரியப்பட்ட போலீசார், பெற்றோரிடம் குழந்தைகளை தனியாக கடைகளுக்கு அனுப்ப கூடாது என அறிவுரை வழங்கினர்.