ஊட்டியில் அசால்ட்டாக லாட்ஜிக்குள் ஏறி சென்ற சிறுத்தை.. அலறவைக்கும் CCTV
தனியார் விடுதிக்குள் வந்து இரை தேடிய சிறுத்தை - சிசிடிவி
உதகையில் ஒரு தங்கும் விடுதிக்குள் நுழைந்த ஒரு சிறுத்தை உணவு தேடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. உதகையில் உள்ள பழைய பூங்கா சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்குள் வந்த இந்த சிறுத்தையானது, படிக்கடில் ஏறி உணவை வேட்டை ஆடுவதற்காக நோட்டமிட்டது. இதுகுறித்த வீடியோ வெளியாகி, அந்த பகுதி மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது. இதனிடையே, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.