சங்கரன்கோவில் அருகே வளர்ப்பு நாய் இறந்த சோகத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் காவல்நிலையத்திற்குட்பட்ட சென்னிகுளம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் தான் வளர்த்து வந்த நாய் இறந்ததால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வளர்த்த நாய் இறந்த சோகத்தில் பெருமாள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்த உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பெருமாளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கா நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...
வளர்ப்பு நாய் இறந்த துக்கத்தில் பெருமாள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...