சென்னையில் 1 மணி நேரம் விடாமல் அடித்த மழை - சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்
சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியில், சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். ஒரு மணி நேரம் பெய்த கனமழையால், ஐயப்பன் தாங்கல் பேருந்து நிலையத்தை சுற்றி தண்ணீர் தேங்கியது. பூந்தமல்லி செல்லக்கூடிய சாலையிலும் மழைநீர் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மழைநீருக்கு நடுவே போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.