ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தம் செய்யும் போது பேசிக் கொண்டு இருக்க கூடாது என்றும் விடைத்தாள் திருத்தும் மையத்திற்குள் எந்த காரணத்தை கொண்டும் செல்போன்களை பயன்படுத்த கூடாது என்றும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. செல்போன் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய் முதல் முப்பதாம் தேதிக்குள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் திருத்தம் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ் வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள், தமிழ் வழி தேர்வு விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள், ஆங்கில வழி விடைத்தாள்களையும் திருத்தம் செய்ய தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.