“குறிபார்த்தும் சுடுவேன்...இசையாலும் மயக்குவேன்...“ புத்தகத்திருவிழாவில் அசத்திய அன்பில் மகேஷ்
நாகையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில், துப்பாக்கியையும், செண்டை மேளத்தையும் இயக்கி அசத்தினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி... நாகையில் 4ம் ஆண்டு பிரமாண்ட புத்தகத்திருவிழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார். ஒவ்வொரு அரங்கமாக பார்வையிட்ட அமைச்சர் அதிநவீன துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்த அரங்கில் துப்பாக்கியை எடுத்து குறிபார்த்து சுட்டதுடன், அடுத்து மரபு சார் இசைக்கருவி அரங்கில் செண்டை மேளத்தை இசைத்து அசத்தினார்...