பொய் கேஸ் போட்ட SI-க்கு தக்க பாடம் புகட்டிய மனித உரிமைகள் ஆணையம்

Update: 2025-04-17 03:48 GMT

ஆடு மேய்ப்பவரின் குடும்பத்தினர் மீது பொய் வழக்கு பதிவு செய்த புகாரில் காவல் உதவி ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரியலூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த புகாரில், 2018ம் ஆடு முந்திரி தோட்டத்துக்குள் நுழைந்ததால், பாதுகாவலர்கள் அவரின் வீட்டிற்குள் நுழைந்து மனைவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, தன்னை தாக்கியதாக கூறினார். அப்போது மருத்துவமனைக்கு சென்ற அவரது மகனை ஆண்டிமடம் உதவி ஆய்வாளர் சற்குணம் பொய் வழக்கில் கைது செய்ததாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த மனித உரிமைகள் ஆணையம், அந்த போலீசார் மூலம் ராமலிங்கத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்