இளைஞரிடம் ரூ.7 லட்சம் ஹவாலா பணம் எப்படி வந்தது? விசாரணையில் திடுக்கிடும் தகவல்
சென்னை திருவல்லிக்கேணி வாகன தணிக்கையில், பொறியியல் பட்டதாரியிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த அவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்த போது, உரிய ஆவணம் இன்றி ஹவாலா பணத்தைக் கொண்டு செல்வது தெரியவந்தது. சென்னை MGR நகர் நெசப்பாக்கத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சேக் நூருதீன் என்ற அந்த இளைஞரிடம் இருந்து கைப்பற்றிய 7 லட்சம் ஹவாலா பணத்தை, போலீசார் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். முன்னதாக, இவரிடம் மண்ணடி ஈவினிங் பஜாரில் உள்ள ஒரு கடையில், 10 ரூபாய் நோட்டை காண்பித்தால், பணம் தருவார்கள் என துபாயில் இருந்து இப்ராஹிம் என்பவர் தெரிவித்துள்ளார். அதன்படி, பணத்தை வாங்கிக் கொண்டு இப்ராஹிம் கூறிய சில வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்துவதற்காக, திருவல்லிக்கேணி நோக்கி பைக்கில் வந்தபோது இவர் போலீசாரிடம் சிக்கினார்.