Chennai | வேலைக்கு சென்று திரும்பிய மருத்துவ மாணவிகளுக்கு அதிர்ச்சி.. போலீசுடன் கடும் வாக்குவாதம்.. பரபரப்பு
சென்னை மவுலிவாக்கம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளை வருவாய்துறை இடித்து அகற்றியது. அப்போது, இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் தங்கி இருந்த விடுதியும் இடிக்கப்பட்டு அங்கு தங்கியிருந்தவர்களின் உடைமைகள் சாலையோரம் போடப்பட்டன. இதனால், வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த மாணவிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.