லாரி மீது பேருந்து மோதி கொடூர விபத்து - 4 பேர் பலி.. துடிதுடித்த பல உயிர்கள்
தெலுங்கானாவில், லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதிய பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் விகாரபாத் (Vikarabad) மாவட்டம் பரிகி என்ற கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள், தனியார் சொகுசு பேருந்தில் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, ரங்காப்பூர் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது அந்த பேருந்து வேகமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்த நிலையில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.