பள்ளிகரணையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கடந்த 2024 பிப்ரவரி மாதம் பிரவீன் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி ஷர்மிளா இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில், பிரவீனின் தந்தை கோபி என்பவர் சிபிஐ விசாரணை கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், விசாரணையின் போது இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து,
மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.