திமுறிய இந்து முன்னணி தலைவர் - கையை முறுக்கி குழந்தை போல தூக்கி சென்ற போலீஸ்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இந்து முன்னணி மாவட்ட தலைவரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, வாகனத்தில் ஏற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திருப்பரங்குன்றம் மலையில் இந்து முண்ணனி அமைப்பினர் அறிவித்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சங்கரன்கோவில் பகுதியில் உள்ள இந்து முண்ணனி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகத்தை கைது செய்ய வந்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டதால், அவரை போலீசார் கையை முறுக்கி வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .