வீட்டின் மேற்கூரையை உடைத்து கொண்டு தொழிலாளி தலையில் விழுந்த ராட்சத கல்.. பறிபோன உயிர்
திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையம் பாறைக்குழி பகுதியில், நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக ஹாலோ பிளாக் கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்ததுள்ளது. இதனால் அருகில் தற்காலிக செட்டில் தங்கி வேலை பார்த்துவந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி ராஜ் என்பவர் தலையில் கல் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.