நேருக்கு நேர் மோதிய அரசு பஸ், தனியார் காலேஜ் பஸ் - பயணிகள், மாணவர்கள் நிலை என்ன?
தருமபுரியில் அரசு பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் மோதி ஏற்பட்ட விபத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தருமபுரியில் இருந்து நாகாவதி அணை செல்லும் நகரப் பேருந்தும் தனியார் கல்லூரி பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பலத்த காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.