உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்த 4 வயது குழந்தை
ரயில் நிலையம் அருகே அதிர்ச்சி..
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே 4 வயது ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே 4 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்று உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த நிலையில் இருந்த குழந்தையை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.