கடைசி நிமிட தவறு...சரியாக குகேஷ் செய்த மூவ் - வெற்றிக்கு காரணமே இதுதான்

Update: 2024-12-13 06:02 GMT

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷும் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லிரெனும் மோதினர். 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் 13 சுற்றுகளின் முடிவில் இருவரும் தலா 6 புள்ளி ஐந்து புள்ளிகள் பெற்று இருந்தனர். 7 புள்ளி 5 புள்ளிகள் பெறுபவர் சாம்பியன் ஆவார் என்பதால் இறுதிச் சுற்றில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் சிறப்பான நகர்வுகளை மேற்கொண்ட குகேஷ், லிரெனைக் காட்டிலும் ஒரு சிப்பாயை அதிகமாக வைத்திருந்தார். இது அவருக்கு சாதகமாக அமைய பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் குகேஷ் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆனார். 18 வயதே ஆகும் குகேஷ் மிக இளம் வயதில் உலக சாம்பியன் ஆனவர் என்ற சாதனையையும் படைத்து, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்