ஒப்புதல் கொடுத்தது அரசு - தமிழக போக்குவரத்தில் வருகிறது மிக முக்கிய மாற்றம்
மேக்சிகேப் வேன்களை மினி பேருந்தாக மாற்றும் திட்டம்
தமிழகத்தில் மேக்சிகேப் (MAXICAB) வேன்களை மினி பேருந்துகளாக மாற்றி, தொலைதூர பகுதிகளுக்கு பேருந்து சேவையை அளிக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் கிராம பகுதிகளை இணைக்கும் வகையில் 25 கிலோ மீட்டர் தூரம் வரை மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.. இதில் 18 கிலோ மீட்டர் பேருந்து சேவை இல்லாத வழித்தடத்திலும், 8 கிலோமீட்டர் ஏற்கெனவே பேருந்து சேவை உள்ள வழித்தடத்திலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 12 முதல் 14 இருக்கைகள் கொண்ட மேக்சிகேப் வேன்களை மினி பேருந்துகளாக இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் மலைப் பகுதி, குறுகலான சாலைகளில் மினி பேருந்தை இயக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஒப்புதல் அளிக்கலாம் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதேசமயம், பேருந்துகளில் இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்றும், யாரும் படியில் தொங்கியபடி பயணிக்கக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.