Tenkasi Officer | வரி வசூல் செய்ய வீட்டுக்குள் நுழைந்து `ஆபாசமாக’ வீடியோ எடுத்த அரசு ஊழியர்
Tenkasi Officer | வரி வசூல் செய்ய வீட்டுக்குள் நுழைந்து `ஆபாசமாக’ வீடியோ எடுத்த அரசு ஊழியர்
குளித்த பெண்ணை வீடியோ எடுத்த நகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில், வீடு ஒன்றில் குளித்த கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்ததாக கூறி, நகராட்சி ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட மேலூர் பகுதியில் நகராட்சி ஊழியர்கள் வரி வசூல் செய்வதற்காக சென்றபோது, வீடு ஒன்றில் குளித்து கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண் நகராட்சி ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வரி வசூல் மேற்பார்வையாளரான அனந்தராமன் தவறு செய்தது உறுதியானதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.