கிரிக்கெட் வீரர்களை தடுமாற வைத்த சுழற்காற்று - கோவையில் வைரலாகும் வீடியோ
கோவையில் மழைக்கு முன்னதாக வீசிய சுழற் காற்றின் வீடியோ காட்சி வேகமாக பரவி வருகின்றது. கோவை மாவட்டம் தடாகம் அருகே உள்ள யமுனா நகர் பகுதியில் மழைக்கு முன்னதாக திடீரென சுழற் காற்று வீசியடித்தது. அப்போது மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வீரர்கள் சுழற்காற்றை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறும் வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.