Tiruchuli | இன்ஸ்டா மூலம் விஷத்தை பரப்பிய கும்பல் - குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்
திருச்சுழியில் இன்ஸ்டாகிராம் மூலமாக புகையிலை விற்பனையில் கொடி கட்டி பறந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அதிக அளவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திருச்சுழி காவல் நிலைய போலீசார் தமிழ்பாடி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த கார் மற்றும் ஆட்டோவை மடக்கி சோதனை செய்ததில் அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரை கைது செய்த போலீசார் கார் மற்றும் ஆட்டோவில் இருந்த 2,500 கிலோ குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தில் தொடர்புடைய மேலும் இருவரையும் கைது செய்தனர்.