வீடு புகுந்து தாய், மகனை தாக்கிய கும்பல்.. ``யாருக்கும் இப்படி நடக்க கூடாது'' - அதிர்ச்சி காட்சி

Update: 2025-08-23 02:16 GMT

வாணியம்பாடியில் வீடுபுகுந்து தாய் மற்றும் மகன் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியைச் சேர்ந்த ரூபணாவின் முதல் மகன் புர்ஹான், தனியார் கல்லூரியில் வகுப்புகளை முடித்து வீடுதிரும்பியபோது, சில இளைஞர்கள், புர்ஹானை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதோடு செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, மாணவரின் வீட்டிற்கு சென்ற அந்த கும்பல், ஆபாச வார்த்தைகளால், தாய், மகனை திட்டியதோடு, இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், புகாரின்பேரில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்