விநாயகர் சதுர்த்தி - வாயை பிளக்க வைக்கும் பூக்களின் விலை

Update: 2025-08-26 08:31 GMT

வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது..

அதன்படி சாமந்தி பூ கிலோ 220 ரூபாயிலிருந்து 400 ரூபாயாகவும், மல்லி 350 ரூபாயிலிருந்து 450 ரூபாயாகவும், சம்பங்கி 230 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரையும் விற்பனை செய்யபடுகிறது.

அதேபோன்று கோழிகொண்டை பூ கிலோ 140 ரூபாயிலிருந்து 180 ரூபாயாகவும், அருகம்புல் 1 கட்டு 60 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்க ஓரே நேரத்தில் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்ற நிலையில் மார்க்கெட் சாலையில் திடீரென வந்த ஆம்புலன்ஸ் சுமார் அரை மணி நேரம் நெரிசலில் சிக்கியது. 

Tags:    

மேலும் செய்திகள்