மத்திய, மாநில அரசு திட்டங்கள் மூலம் மோசடி?பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் கொந்தளிப்பு
மத்திய, மாநில அரசுகளின் பயிற்சி திட்டங்களை பெற்று தருவதாக கூறி ஒரு கோடிக்கு மேல் பணம் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் குமாரசாமிப்பட்டியை சேர்ந்த லதாமகேஸ்வரி உள்ளிட்ட பலர், பிரியா என்பவர், நான் முதல்வன், பிரதமர் மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகிய திட்டங்களில் பணம் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் தேர்ச்சி பெறாததால் நிதி கிடைக்கவில்லை என்று பிரியா விளக்கம் அளித்துள்ளார்.