திருமணம் தாண்டிய உறவில் இருந்த ஜோடி தற்கொலை

Update: 2025-12-16 23:31 GMT

தலையாரிக்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதே போல சின்னமணக்குடியை ஒட்டிய நுரையூரை சேர்ந்தவர் தேவி என்பவருக்கும், திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மினி பேருந்து ஓட்டுநரான விஜய்க்கும், தேவிக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது.

இது குறித்து குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், இருவரையும் கண்டித்துள்ளனர். இதனை தொடர்ந்து இருவருமே ஊரை விட்டு வெளியேறி கொஞ்ச காலம் தனியாக வசித்துள்ளனர்.

பின்னர் காவல்துறையினர் அவர்களை கண்டறிந்து மீண்டும் குடும்பத்தில் சேர்த்தனர்.

இந்த நிலையில் மீண்டும் விட்டை விட்டு வெளியேறி, சின்னமணகுடி பின்புறமுள்ள காட்டுப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

மூன்று நாட்கள் கழித்து உடலை கண்டறிந்த போலீசார், உடற்கூறாய்விற்காக,அதனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்