கடலூரில் மில்டரி கேண்டினில் இருந்து பேசுவதாக கூறி ஸ்வீட் கடைக்காரரிடம் 14 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குள்ளஞ்சாவடி பகுதியில் கொட்டகை அமைத்து ஸ்வீட் கடை நடத்தி வரும் சசிகுமார்-சுமதி தம்பதியிடம் குறைந்த விலைக்கு எண்ணெய், ரம் அனுப்புவதாக கூறி, மர்ம நபர் ஒருவர் ஜி-பே மூலம் பணம் பெற்றுள்ளார்.
பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தம்பதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போதுதான் தங்களை போல் பலர் இது ஏமாற்றப்பட்டு இருப்பதை அவர்கள் அறிந்தனர்.