Sri Lanka Pepper Spray Theft | பெப்பர் ஸ்பிரே அடித்து திருட முயன்ற திருடி- "அடி ஒவ்வொன்னும் இடி"
Sri Lanka Pepper Spray Theft | கவிழ்த்து விட்ட "பெப்பர் ஸ்பிரே" பிளான் - பெண்ணின் பிடரியை பொங்க விட்ட கடைக்காரர்
இலங்கையில் நகை கடையின் உரிமையாளரின் முகத்தில் "பெப்பர் ஸ்பிரே"வை அடித்து கொள்ளையடிக்க முயன்ற இளம்பெண் கையும் களவுமாக சிக்கினார்
நுவரெலியா, ஹட்டன் நகரில் உள்ள நகை கடைக்கு வந்த ரோஷனாத சில்வா என்ற இளம்பெண் நகை வாங்குவது போல நாடகமாடியுள்ளார். சற்றுநேரத்தில், நகையை கையில் வாங்கி பார்த்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென பையில் இருந்த "பெப்பர் ஸ்பிரே"வை எடுத்து உரிமையாளரின் முகத்தில் அடித்துள்ளார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட கடையின் உரிமையாளர் இளம்பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில், பிணையில் விடுவித்துள்ளனர்.