தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலை பகுதியில் பூக்கடைக்காரர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். தனது கடை முன்பு ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி, கார்த்திக், பிரபாகரன் ஆகியோரது தரப்புக்கும், சுடர்வடிவேல் தரப்புக்கும் இடையே தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சுடர் வடிவேலை, அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக ஏற்கனவே, வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதலில் பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த மேலும் 4 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.